செல்ஃபி எடுக்க செல்போனை நீட்டிய நபர்..சற்றும் யோசிக்காமல் சசிக்குமார் செய்த செயல் | Sasikumar
சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் நடிகர் சசிக்குமார் சாமி தரிசனம் செய்தார். புத்தாண்டை ஒட்டி, பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலுக்கு நேற்று ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்தனர். அதிகாலை முதல் தொழிலதிபர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் உள்ளிட்டோர் வந்த வண்ணம் இருந்தனர். இந்நிலையில், நடிகர் சசிக்குமாரும் சாமி தரிசனம் செய்தார். அவரிடம் ஏராளமான பக்தர்கள், காவல்துறையினர் உள்ளிட்டோர் செல்ஃபி எடுத்து கொண்டனர். ஏராளமான பொதுமக்கள் அவருக்கு கை கொடுத்து மகிழ்ந்தனர்.