சல்மான் கான் நடிக்கும் சிக்கந்தர் படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அட்டக்கத்தி படம் மூலம் தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமான சந்தோஷ் நாராயணன், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழி படங்களுக்கு இசையமைத்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை தக்க வைத்தார். இந்நிலையில், கல்கி 2892 ஏடி திரைப்படத்திற்கு இசையமைத்ததன் மூலம் பாலிவுட்டில் கவனம் பெற்ற சந்தோஷ் நாராயணன், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், சல்மான் கான் நடிக்கும் சிக்கந்தர் படத்திற்கு இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.