தமிழ்ல டாப் நட்சத்திரங்கள்ல ஒருத்தரா வலம் வந்துட்டு இருக்க நம்ம ரவி திரைத்துறைல நாயகனா அறிமுகமாகி 20 வருடங்கள கடந்துட்டாரு...
இத செலிப்ரேட் பண்ற மாதிரி...அவரோட அறிமுகப்படமான ஜெயம ரீ ரிலீஸ் பண்ணப் போறாங்களாம்...
போயா...போ...போ...வசனம்...அப்றம்...அட்லக்காக்கு மட்லேரியாங்கிற ட்லக்கா தமிழ்...இதெல்லாம் மறக்க முடியுமா?...
டபுள் ட்ரீட்டா ஜெயம் படத்த போலயே ப்ளாக் பஸ்டரான எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமியும் ரீ ரிலீஸ் ஆகப் போகுது...
ஓய் மலபார்...மலபார்னு நம்ம ரவி அசின் பின்னாடி பித்து பிடிச்ச மாதிரி சுத்துவாறே...
90ஸ் கிட்சுக்கு இதெல்லாம் பசுமையான நினைவுகள்...
இந்த 2 படங்களயும் நவீன உயர்தர 4K டிஜிட்டல் தொழில் நுட்பத்துல ரொம்ப சீக்கிரம் ரிலீஸ் பண்ண போறாங்க...