14 கிலோ மீட்டர் கிரிவலமாக சென்று திருவண்ணாமலை கோயிலில் சாமி தரிசனம் செய்த சிநேகா- பிரசன்னா

Update: 2025-03-28 03:25 GMT

நடிகை சிநேகா தனது கணவர் பிரசன்னாவுடன் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் மேற்கொண்டார். 14 கிலோ மீட்டர் கிரிவலமாக சென்ற அவர்கள், கோயிலில் உள்ள சம்பந்த விநாயகரை வணங்கி, அதைத் தொடர்ந்து, அண்ணாமலையர் உண்ணாமுலை அம்மனுக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேகத்தில் கலந்து கொண்டனர். அவர்களுக்கு கோயில் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னர், அவர்களுடன் பொதுமக்கள் புகைப்படம் மற்றும் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்