நடிகர் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவை நீக்கக் கோரி நடிகர் பிரபு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், சிவாஜி கணேசன், உயிருடன் இருந்த போதே, அன்னை இல்லம் வீட்டை தனக்கு உயில் எழுதி வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வீட்டில் சகோதரர் ராம்குமாருக்கு எந்த உரிமையும் இல்லாத நிலையில், அவர் தொடர்புடைய நிதி பிரச்னையில், வீட்டை ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவை நீக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. இந்த மனு, நீதிபதி அப்துல் குத்தூஸ் முன், அடுத்த வாரம் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.