ராஷ்மிகா, சமந்தாவுக்கு நடந்த அதே அதிர்ச்சி - "இனி எந்த ஒரு பெண்ணுக்கும் இது நடக்க கூடாது" - வேதனையில் குமுறும் பிரபல நடிகை
தனது முகத்தை ஆபாசமாக சித்தரித்து டீப் ஃபேக் வீடியோ ஒன்றை கும்பல் இணையத்தில் பரப்பி வருவதாக சைபர் கிரைம் போலீசில் நடிகை ஒருவர் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. முழு விவரங்களையும் பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்..
கை ராஷ்மிகா மந்தனா, சமந்தா உள்ளிட்ட பல முன்னணி நடிகைகளின் டீப் ஃபேக் வீடியோக்கள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி அவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியதோடு திரையுலகில் பெரும் சலசலப்பையும் ஏற்படுத்தி வந்தது..
இந்நிலையில்தான், அரியானாவை சேர்ந்தவரும், தமிழில் நடிகர் ஜீவாவின் வரலாறு முக்கியம், N4 உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக நடித்தவருமான பிரக்யா நாக்ராவின் இந்த சைபர் கிரைம் புகார் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது..
தனது பெயரை வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் ஹேஸ்டேக்கை இணையத்தில் வைரலாக்கி வரும் கும்பல், டீப் ஃபேக் வீடியோ மூலம் தனது முகம் சித்தரிக்கப்பட்ட ஆபாச வீடியோவை பரப்பி வருவதாக தெலங்கானா சைபர் கிரைம் போலீசில் புகாரளித்திருக்கிறார்...
டெக்னாலஜி என்பது நமக்கு உதவுவதற்காகவே தவிர, நம் வாழ்க்கையை துயரத்தில் ஆழ்த்த இல்லை எனவும், இதுபோன்ற ஏ ஐ தொழிநுட்பத்தை தவறாகப் பயன்படுத்தும் கயவர்களை என்ன செய்வது எனவும் ஆதங்கத்தை கொட்டியிருக்கிறார்..
மேலும், இந்த விவகாரத்தை தான் வலுவுடன் எதிர்கொள்ள இருப்பதாகவும், இந்த தருணங்களில் தனக்காக இருக்கும் மக்களுக்கு நன்றி தெரிவித்த பிரக்யா நாக்ரா, வேறு எந்த ஒரு பெண்ணும் இப்படிப்பட்ட சோதனையைச் சந்திக்கக் கூடாது என பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்த சமயத்தில், நடிகை வாணி போஜனும், நடிகைகளின் முகங்கள் ஆபாசமாக சித்தரிக்கப்பட்டு இணையத்தில் பரப்பப்படுவதற்கு வேதனை தெரிவித்திருக்கிறார்..
சமூக வலைதளங்களில் உலா வரும் அனைத்தையும் மக்கள் உண்மை என நம்பி விடுவதால், இது போன்ற விவகாரங்களில் ஹீரோக்களை விட ஹீரோயின்களுக்கே அதிக பாதிப்பு எனவும் தெரிவித்திருக்கிறார்..