இசையமைப்பாளர் இளையராஜாவின் பயோபிக் திரைப்படத்தில், நடிகர் தனுஷ் கதாநாயகனாக நடிக்கவுள்ளதாகவும், கமல்ஹாசனின் திரைக்கதையில் அருண் மாதேஸ்வரன் இயக்க உள்ளதாகவும் அறிவிப்பு வெளியானது. இப்படத்திற்கு இளையராஜாவின் இசையையே பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்யப்பட்ட நிலையில், திரைக்கதை அமைக்கும் பொறுப்பில் இருந்து கமல்ஹாசன் திடீரென விலகினார். மேலும் தனுஷ் அடுத்தடுத்து வேறு புதிய படங்களில் நடிக்கவுள்ளதாகவும், இயக்கவுள்ளதாகவும் அறிவிப்புகள் வெளியானது. இந்நிலையில் இளையராஜாவின் பயோபிக் திரைப்படம் கைவிடப்பட்டதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் படக்குழுவினர் தரப்பிலிருந்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இன்னும் வெளியாகவில்லை.