Oh My God... ரஜினியே இப்போ God-இனி க... அஜித்தே... இல்ல... ஆண்டவா ரஜினியே... மெய்சிலிர்க்கும் மதுரை

Update: 2024-12-11 11:22 GMT

மதுரை திருமங்கலத்தில் உள்ள ரஜினி கோவிலில் நடிகர் ரஜினிகாந்திற்கு 300 கிலோ எடையில் முழு கருங்கல்லில் சிலை வைத்து அசர வைத்துள்ளார் ரசிகர் ஒருவர்... முன்னாள் ராணுவ வீரர் கார்த்திக் தீவிர ரஜினி ரசிகர்... இவர் தனது வீட்டிலேயே ரஜினிக்கு சிறிய கோவில் வைத்து அன்றாடம் பூஜைகள் செய்து வரும் நிலையில், ரஜினியின் 74வது பிறந்த நாளை முன்னிட்டு ரஜினி கோவிலில் அவருக்கு 300 கிலோ எடை, மூன்றரை அடி உயரத்தில் சிலை வைத்து யாக பூஜையுடன் பிரதிஷ்டை செய்தார்... ரஜினி சிலைக்கு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டன.. தொடர்ந்து கார்த்தி தனது குடும்பத்தாருடன் வழிபட்டார்... ரஜினி மீதான அவரது ரசிகரின் தெய்வீக பாசம் அனைவரையும் வியப்படையச் செய்துள்ளது...

Tags:    

மேலும் செய்திகள்