யாரோ போல இருந்த தனுஷ்.. லுக்கு விட்ட நயன்.. சிரிச்சி சிரிச்சி பேசிய SK மனைவி - வைரலாகும் புது வீடியோ
கோலிவுட்டையே களேபரக் காடாக்கிய தனுஷ் நயன்தாரா மோதலுக்கு பின், இருவரும் ஒரே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சம்பவம் படு வைரலாகி வருகிறது...இதன் பின்னணியை பார்க்கலாம் விரிவாக...
அண்மையில் தனது திருமண ஆவணப்படத்தில் நானும் ரவுடி தான் படக் காட்சிகளை பயன்படுத்த ஒப்புதல் வழங்காமல் 2 வருடங்களாக அலைய விட்டதோடு, படப்பிடிப்பு தளத்தில் எடுத்த 3 விநாடி பிடிஎஸ் காட்சிகளை பயன்படுத்தியதற்கு 10 கோடி வரை கேட்டதாக பக்கம் பக்கமாக அறிக்கை வெளியிட்டிருந்தார் நயன்...
அதில் ஆங்கிலத்தில் அழுத்தம் திருத்தமாக தனுஷை சாடியிருந்த அவர், ஜெர்மன் வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சித்திருந்தது சர்ச்சையின் ஹைலைட்...
இதற்கு ஆதரவு, எதிர்ப்பு, விமர்சனம் என சமூக வலைத்தளங்கள் முழுவதும் காரசார விவாதங்கள் அரங்கேற...திரை வட்டாரத்திலும் இச்சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது...
இதுகுறித்து தனுஷ் தரப்பில் விளக்கமளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முதுகுக்கு பின் பேசுபவர் குறித்து கவலையில்லை..மற்றவர்களின் விமர்சனத்துக்கு பதிலளிக்க விரும்பவில்லை.
நடிகர் தனுஷிடம் என்.ஓ.சி வாங்குவதற்கு இரண்டு வருடம் காத்திருந்ததாக நயன்தாரா கூறியதெல்லாம் பொய். இது குறித்து மேலும் பேச நான் விரும்பவில்லை. நானும், என் மகனும் இப்போது வேலையில் மட்டுமே கவனம் செலுத்துகிறோம் என தெரிவித்திருந்தார்...
இந்த பரபரப்பு தணிவதற்குள், நயன்தாரா பியான்ட் தி ஃபேரிடேல்...என்ற திருமண ஆவணப்படம் வெளியாகி அதில் நானும் ரவுடி தான் படக் காட்சிகளும் இடம்பெற்றிருந்தன...
இது தொடர்பாக பரவலாக பேசப்பட்டு வர, படத்தில் இடம்பெற்ற காட்சிகளுக்கு தடையில்லா சான்றிதழ் அளித்த, ஷாருக்கான், அர்ச்சனா கல்பாத்தி, உதயநிதி ஸ்டாலின், ஏ.ஆர். முருகதாஸ், என தனுஷை தவிர்த்து அனைவருக்கும் நன்றி தெரிவித்திருந்தார்..
இப்படி புகைச்சல் வளர்ந்து கொண்டே போக....திடீரென இருவரும் ஒரே நிகழ்ச்சியில் தென்பட்டது கவனத்தை பெற்றுள்ளது...
தனுஷ் இயக்கி நடிக்கும் இட்லிக்கடை படத்தை தயாரிக்கும் ஆகாஷ் பாஸ்கரனின் திருமணத்தில் தான் இந்த சுவாரஸ்யம் அரங்கேறியுள்ளது...
சிவகார்த்திகேயனின் மனைவி ஆர்த்தியுடன் நயன்தாரா அமர்ந்து பேசிக் கொண்டிருக்க, அருகிலேயே தனுஷ் அமர்ந்து கொண்டிருக்கும் காட்சிகள் தான் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது...
ஒரு காலத்தில் நெருங்கிய நண்பர்களாக இருந்து தற்போது இருவேறு துருவங்களாக மாறியிருக்கும் இரு பெரிய நடிகர்களின் இந்த மோதல் போக்கு எத்தனை காலம் நீடிக்கும் என கருத்து தெரிவித்து வருகின்றனர் இணையவாசிகள்....