துபாயையே ஷேக் ஆக்கிய... அஜித்தின் தைரியம்... கிடைத்த தனி கவுரவம்... நாட்டுக்கே பெருமை..
துபாய் 24H சீரிஸ் கார் ரேசில் 991 பிரிவில் அஜித்குமார் அணி 3வது இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளது... அதேபோல் ஜிடி 4 பிரிவில் ஸ்பிரிட் ஆஃப் தி ரேஸ் என்ற விருதைப் பெற்றுள்ளது... விபத்தில் சிக்கியபோதும் மீண்டு வந்து வெற்றிகரமாக பந்தயத்தைத் தொடர்ந்த தைரியத்தைப் பாராட்டி இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. அஜித்குமார் ரேஸிங் அணி வெற்றி பெற்றதும் அஜித் நமது தேசியக் கொடியுடன் மகிழ்ச்சியாக கொண்டாடினார்... அத்துடன் சக வீரர்களைக் கட்டியணைத்து மகிழ்ந்தார். அவருக்கு ரசிகர்களும், மாதவன் உள்ளிட்ட திரையுலகினரும் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்...