"எனக்கு எண்டே கிடையாது.."... மறுபிறவி எடுக்கும் அம்பாசிடர் கார் - மீண்டும் வெளியே வரும் வேங்கை

40 ஆண்டுகளாக இந்தியாவின் நம்பர் ஒன் காராக வலம் வந்த அம்பாசிடர் கார், மீண்டும் தயாரிக்கப்பட உள்ளது.

Update: 2022-05-29 03:59 GMT

1957ல் பிர்லா குழுமத்தின் ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனம், அம்பாசிடர் கார்களை உற்பத்தி செய்யத் தொடங்கியது. மேற்கு வங்கத்தின் உத்தரபாரா நகரில்அமைந்துள்ள தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்ட வெள்ளை நிற அம்பாசிடர்கார்கள், 1990கள் வரை இந்தியா முழுவதும் மிகப் பரவலாக பயன்படுத்தப்பட்டன.

குடியரசு தலைவர்கள், பிரதமர்கள், முதல்வர்கள், அமைச்சர்கள், தொழிலதிபர்கள், சினிமா நட்சத்திரங்கள் தொடங்கி நடுத்தர வர்கத்தினர் வரை அனைத்து தரப்பினரின் ஆதர்ச காராக கோலோச்சியது. 1990களில் தாரளமயமாக்கல் கொள்கைகளின் விளைவாக பல்வேறு புதிய கார்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு, அம்பாசிடர் காரின் சந்தையை பிடித்தன.

2000ம்களில் அம்பாசிடர் கார் விற்பனை வெகுவாக சரிந்ததால், ஹிந்துஸ்தான் மோட்டர்ஸ் நிறுவனதின் கடன் சுமை மற்றும் தொடர் நஷ்டம் வெகுவாக அதிகரித்தது. 2014ல் அம்பாசிடர் கார் உற்பத்தி நிறுத்தப்பட்டது. 2017ல் அம்பாசிடர் பிராண்டை, பிரான்ஸை சேர்ந்த பீஜோ கார் நிறுவனத்திற்கு 80 கோடி ரூபாய்க்கு சி.கே.பிர்லா குழுமம் விற்பனை செய்தது.

தற்போது மீண்டும் அம்பாசிடர் பிராண்டு காரை தயாரிக்கும் முயற்சியில் பியூஜியோவும், பிர்லா குழுமத்தின் ஹிந்த் மோட்டார் பைனான்ஷியல் கார்ப்பரேஷனும் கூட்டு முயற்சியில் இறங்கி உள்ளன. புதிய ரக அம்பாசிடர் கார், மிக நவீன வடிவத்தில், மின்சார காராக வடிவமைக்கப்பட உள்ளது. உத்திரபாரா தொழிற்சாலையில், மின்சார அம்பாசிடர் கார்களுடன், மின்சார இரு சக்கர வாகனங்களும் தயாரிக்கப்பட உள்ளன.



Tags:    

மேலும் செய்திகள்