டெல்லியில் ஆட்சியமைத்தால் ரூ.25லட்சம் மருத்துவ காப்பீடு..காங்கிரஸின் கொடுத்த வாக்குறுதி | Delhi
டெல்லியில் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி வெளியிட்டு வருகிறது. முன்னதாக பெண்களுக்கு மாதந்தோறும் 2 ஆயிரத்து 500 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என காங்கிரஸ் அறிவித்திருந்தது, இந்நிலையில் ராஜஸ்தான் மாநில முன்னாள் முதல்வர் அஷோக் கெலாட் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள், செய்தியாளர்களை சந்தித்து அடுத்தக்கட்ட வாக்குறுதியை வெளியிட்டனர். அதன்படி டெல்லியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால், ஜீவன் ரக்ஷா திட்டம் எனப்படும், பொது மக்களுக்கு 25 லட்ச ரூபாய் மருத்துவ காப்பீடு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவித்தனர். மேலும் காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலங்களில் இந்த திட்டம் ஏற்கனவே நடைமுறையில் இருப்பதாகவும், பிரதமர் மோடி பொய் கூறுவது போன்று காங்கிரஸ் எந்நாளும் பொய் கூறாது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.