வீட்டுக்குள் புகுந்ததும் விநாயகர் சிலையை தொட்டு கும்பிட்ட யானை..சிலிர்க்க விடும் காட்சிகள்
கோவை தொண்டாமுத்தூரில், உணவு தேடி ஊருக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை, வீட்டின் கேட்டை உடைத்து உள்ளே புகுந்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. நேற்று இரவு சத்வா அவென்யூவில் உள்ள ஒரு வீட்டின் பின் பக்க கேட்டை உடைத்து உள்ளே நுழைந்த காட்டு யானை, உணவு உள்ளதா என தேடி பார்த்து விட்டு முன்பக்க கேட் வழியாக சென்றது. அப்போது கேட்டின் அருகே இருந்த விநாயகர் சிலையை தொட்டு பார்த்து விட்டு காட்டு யானை சென்றது. இதுதொடர்பான காட்சிகள் வெளியான நிலையில், வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.