9 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை

Update: 2022-08-08 04:42 GMT

கேரளாவில் ஏற்கனவே கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இந்த நிலையில், கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், கோட்டயம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களில் இன்று மஞ்சள் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 48 மணி நேரத்தில் வலுப்பெறும் எனவும் அதன் தாக்கத்தால் வட கேரளாவில் மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

வயநாடு மாவட்டத்தில் உள்ள தொழில்முறை கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் இன்று விடுமுறை என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பத்தனம்திட்டா மற்றும் கோட்டயம் மாவட்டங்களில் நிவாரண முகாம்களில் இயங்கி வரும் கல்வி நிறுவனங்களுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்