தமிழின் முதுபெரும் எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் உடல் நலக்குறைவால் காலமானார்.

Update: 2022-10-24 11:44 GMT

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே 1941ஆம் ஆண்டு பிறந்த பா. செயப்பிரகாசம், தமிழ் இலக்கியத் துறையில் சமூக அக்கறையோடும், மக்கள் நலன் சார்ந்து இயங்கக்கூடிய எழுத்தாளர்களில் ஒருவராகவும் திகழ்ந்தார்.

ஒரு ஜெருசலேம், அம்பலக்காரர் வீடு, பொய் மலரும், கரிசலின் இருள்கள், பனை நிழலில் வாழ்க்கை உள்பட ஏராளமான சிறுகதைத் தொகுப்புகளை பா. செயப்பிரகாசம் எழுதியுள்ளார்.

சூரிய தீபன் என்ற புனைப்பெயரில் பல்வேறு கதைகள், நாவல்கள் எழுதிய நிலையில், இவரது படைப்புகள் தமிழின் முன்னணி இதழ்களில் வெளிவந்துள்ளன.

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட செயப்பிரகாசம், சொந்த ஊரான விளாத்திகுளத்தில் காலமானார்.

1971ஆம் ஆண்டு முதல் 1999 வரை, தமிழக அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறையில் இணை இயக்குநராகவும் பணியாற்றினார்.

Tags:    

மேலும் செய்திகள்