உலகக்கோப்பை கால்பந்து போட்டி.. ரசிகர்கள் எதிர்பார்த்த முக்கிய அணி வெற்றி | Footbal 2022

Update: 2022-11-27 04:00 GMT

கத்தார் உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் மெக்சிகோவுக்கு எதிரான ஆட்டத்தில், அர்ஜென்டினா வெற்றி பெற்றது. முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்காத நிலையில், இரண்டாம் விறுவிறுப்படைந்தது. ஆட்டத்தின் 64வது நிமிடத்தில் அர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரர் மெஸ்ஸி கோல் அடிக்க அந்த அணி முன்னிலை பெற்றது. இதனைத் தொடர்ந்து ஆட்டத்தின் 87வது நிமிடத்தில் அர்ஜென்டினா அணியின் ஃபெர்னான்டெஸ் கோல் அடித்து அணியின் வெற்றி வாய்ப்பை அதிகப்படுத்தினார். பின்னர் இரண்டாம் பாதியில் 6 நிமிடங்கள் கூடுதலாக வழங்கப்பட்டது. அதில் கோல் எதுவும் அடிக்கப்படாத நிலையில் 2க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் அர்ஜென்டினா, மெக்சிகோவை வீழ்த்தியது.

Tags:    

மேலும் செய்திகள்