உலக கோப்பை கால்பந்து: செர்பியா, கேமரூன் ஆட்டம் 'டிரா' - சரிவில் இருந்து அபாரமாக மீண்ட கேமரூன்
உலக கோப்பை கால்பந்து தொடரில் செர்பியா, கேமரூன் அணிகள் மோதிய ஆட்டம் டிராவில் முடிந்தது. ஆட்டத்தின் தொடக்கத்தில் 3க்கு ஒன்று என்ற கோல் கணக்கில் செர்பியா முன்னிலை வகித்தது. ஆனால், 2வது பாதியில் அதிரடியாக ஆடிய கேமரூன் வீரர்கள் அடுத்தடுத்து 2 கோல்களை அடித்து அசத்தினர். ஆட்டநேர இறுதியில், இரு அணிகளும் தலா 3 கோல்கள் அடித்திருந்ததால் போட்டி டிராவில் முடிந்தது. இதன்மூலம் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டது.