இந்தியாவில் இன்று மதியம் 2.39 மணியில் இருந்து மாலை 6.29 மணி வரை சந்திர கிரகணம் .
சூரியன், பூமி, சந்திரன் ஒரே நேர்க்கோட்டில் இருக்கும் போது, பூமியின் நிழல் நிலவின் மீது விழும்.
இந்தியாவில் முழு சந்திர கிரகணம் இன்று நிகழ உள்ளது.
இந்திய நேரப்படி மதியம் 2.39 மணிக்கு கிரகணம் தொடங்கும் .
முழு கிரகணம் 3.46 மணிக்கு ஏற்பட்டு, மாலை 6.29 மணி வரை நிகழும்.
இந்தியாவின் அனைத்து இடங்களிலும் முழு சந்திர கிரகணத்தை பார்க்க முடியாது.
தென் அமெரிக்கா, வட அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பகுதிகளில் தென்படும்.
இந்தியாவில் அடுத்த சந்திர கிரகணம் 2023ஆம் ஆண்டு அக்டோபர் 28 ஆம் தேதி நிகழும்.