ஜல்லிக்கட்டுக்கு எதிரான மனுக்கள் மீதான தீர்ப்பை உச்சநீதிமன்ற நீதிபதி கே எம் ஜோசப் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு இன்று அறிவிக்கிறது.
ஜல்லிக்கட்டு போட்டிகளை அனுமதிக்கும் தமிழ்நாடு அரசின் அவசரச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி விலங்கு நல வாரியம், பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் தாக்கல் செய்த மனுக்களை உச்சநீதிமன்ற நீதிபதி கே எம் ஜோசப் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு கடந்த நவம்பர் 23-ஆம் தேதி தொடங்கி விசாரித்தது.
அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு, மனுக்கள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த டிசம்பர் 12-ஆம் தேதி ஒத்தி வைத்தது. இந்த நிலையில் இந்த மனுக்கள் மீதான தீர்ப்பை உச்சநீதிமன்ற நீதிபதி கே எம் ஜோசப் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு இன்று வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.