பாஜகவின் பெருங்கனவை தவிடுபொடியாக்கிய ஒற்றை பெண் - ரிசல்டையே புரட்டி போட்ட கல்பனா

Update: 2024-11-24 07:04 GMT

பாஜகவின் பெருங்கனவை தவிடுபொடியாக்கிய ஒற்றை பெண் - மோடி - அமித்ஷா வீசிய அஸ்திரங்களை பஸ்பமாக்கிய கல்பனா சோரன்

ஜார்க்கண்டில் STUNNING கம்பேக் கொடுத்திருக்கும் ஹேம்ந்த் சோரனின் வெற்றிகான காரணிகளை விவரிக்கிறது இந்த தொகுப்பு.

ஜார்க்கண்ட் சட்டப்பேரவை கடும் போட்டி, பாஜக ஆட்சியை பிடிக்கலாம் என்ற கருத்துக்கணிப்புகளை ஓரமாக தூக்கிப் போட்டுவிட்டு, மீண்டும் ஒய்யாரமாக முதல்வர் அரியணை ஏறுகிறார் ஹேமந்த் சோரன்.

அவருடைய இந்த வெற்றிப்பயணம் அத்தனை எளிதாக அமையவில்லை.. ஜனவரியில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார் ஹேமந்த் சோரன்.

அப்போது தனது உதவியாளர் சம்பை சோரனை முதல்வராக அமர்த்தினார். ஆனால்... அப்போது சம்பை சோரன் தனக்கு அரசியல் எதிரியாவார் என சற்றும் எதிர்பார்த்து இருக்க மாட்டார். ஆனால் அது நடந்தது.

ஹேமந்த் சோரன் சிறையிலிருந்து திரும்பி வந்தும் மீண்டும் முதல்வர் ஆனார் ஹேமந்த் சோரன். இதன் தொடர்ச்சியாக ஜார்க்கண்ட் முக்தி மோரச்சா கட்சியிலிருந்து விலகிய சம்பை சோரன், பாஜகவில் இணைந்தார்.

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் பழங்குடியினர் வாக்கையே அஸ்திரமாக ஏந்தியது பாஜக, சம்பை சோரனை அப்படியே அரவணைத்தது.

இஸ்லாமியர்களால் ஜார்க்கண்டில் இருக்கும் பழங்குடியினருக்கும், அவர்கள் பெண்ணுக்கும், மண்ணுக்குக்கும் ஆபத்து என்ற ஒற்ற பிரசாரத்தை தீவிரமாக்கியது பாஜக.

பாஜகவின் இந்த பிரசாரத்தை எதிர்கொள்வதில் ஹேமந்த் சோரனின் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தடுமாறினாலும், பாஜகவிடம் ஆட்டத்தை விட்டுக்கொடுக்கவில்லை ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரன்.

வங்கதேச ஊடுருவல்காரர்கள் விவகாரத்தில் பாஜகவுக்கு கவுன்டர் கொடுப்பதில் தன்னை முன்னிலை வீராங்கனையாக நிறுத்தியவர், சர்வதேச எல்லை யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது என மோடி, அமித்ஷாவுக்கு அஸ்திரங்களை அப்படியே திருப்பினார்.

சர்வதேச எல்லையில் எல்லைப் பாதுகாப்பு படை என்ன செய்கிறது? ஏன்ற கேள்வியை எழுப்பினார் ஹேமந்த் சோரன். கட்சிக்கு கல்பனா பிரசாரம் பக்கபலமாகவே இருந்தது. பெண்கள் வாக்குகளையும், பழங்குடியினர் வாக்குகளையும் கவரும் வகையில் அவரது பிரசாரம் அமைந்தது.

ஜார்க்கண்ட் அரசு பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை முன்வைத்து பிரசாரம் செய்த கல்பனா சோரன், ஆட்சிக்கு வந்தால் 2 ஆயிரத்து 500 வழங்கப்படும் எனவும் வாக்குறுதியளித்தார். ஜார்க்கண்ட் அரசு சட்டப்பேரவை தேர்தல் நெருங்கியதுமே, இலவச மின்சார வரம்பை 125 யுனிட்டிலிருந்து 200 யூனிட்டாக உயர்த்தியது. விவசாயிகளுக்கான கடனை தள்ளுபடி செய்தது.

ஜனவரியில் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்ட போது பழங்குடியினர் மத்தியிலிருந்த அனுதாப அலையை அப்படியே நீடிக்கவும் செய்தார் கல்பனா சோரன்... எனது கணவரை கைது செய்யாமல் இருந்து இருந்தால் இன்னும் நலலது செய்திருப்பார் என்றே பேசிவந்தார் கல்பனா.

அரசாங்கம் செய்திருக்கும் திட்டங்களையும், பெண்களுக்கு அதிகாரமளிக்கும் திட்டங்களையும் எண்ட் வாக்காளர்களுக்கு கொண்டு செல்லும் வகையில், கட்சியின் பிரசாரத்தை கட்டமைத்தார் கல்பனா சோரன்... இதுபோக காங்கிரஸ் - ராஷ்டீரிய ஜனதா தள கூட்டணியும் களத்தில் தீவிரம் காட்டியது.

மகத்தான வெற்றியை வசமாக்கி STUNNING கம்பேக் கொடுத்திருக்கும் ஹேமந்த் சோரன்... வெற்றிக்கு தனது மனைவிக்கும்... தனது டீமுக்கும் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

மாநிலத்தில் உள்ள 28 பழங்குடியினர் தொகுதியில் 27 தொகுதிகளை ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா - காங்கிரஸ் கூட்டணி வசமாக்க, பாஜகவில் சம்பை சோரன் மட்டும் ஒரு தொகுதியில் வென்றுள்ளார்.

அவரை வைத்தும்... வங்கதேச ஊருவல்காரர்கள் விகாரத்தை வைத்தும் பாஜக போட்ட வியூகத்தை பஸ்மாக்கி,

மீண்டும் பழங்குடியின மண்ணின் மைந்தன் என்பதை நிரூபித்துள்ளார் ஹேமந்த் சோரன். 

Tags:    

மேலும் செய்திகள்