இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி ராஞ்சியில் இன்று நடக்கிறது. பிற்பகல் 1:30 மணிக்கு இந்தப் போட்டி தொடங்குகிறது. முதல் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்ததால், தொடரை தக்கவைக்க இந்த போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அதே சமயம், இந்தப் போட்டியிலும் வென்று தொடரைக் கைப்பற்ற தென்னாப்பிரிக்கா முயற்சிக்கக்கூடும். இரு அணிகளும் வெற்றிக்கு கடுமையாக போராடும் என்பதால், 2வது ஒருநாள் போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.