நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் யானை கூட்டம் ஒன்று குட்டிகளுடன் சாலையை கடந்து சென்றதால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர். கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் நெடுஞ்சாலையில் குஞ்சப்பனை, முள்ளூர், மாமரம், கீழ் தட்டப்பள்ளம் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன.இந்நிலையில், தேயிலை மற்றும் காபி தோட்டங்களில் முகாமிட்டுள்ள காட்டு யானை கூட்டம் ஒன்று, தோட்டத்தில் இருந்து வெளியேறி திடீரென சாலையை கடந்து சென்றது. இதனால், சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது .