தமிழகத்தில் பரவலாக கொட்டிய மழை.. வேரோடு சாலையில் சாய்ந்த மரங்கள்

Update: 2023-05-19 00:36 GMT

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது....


தர்மபுரி மாவட்டம் அரூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை முதல் வெயில் வாட்டி வதைத்த நிலையில் மாலையில், திடீரென கனமழை பெய்தது..

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் அரை மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. சூறை காற்றுடன் பெய்த இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கியது.

இதே போல் கூடலூர் நகரப் பகுதி, மற்றும் மசினகுடி முதுமலையில் திடீரென கனமழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரம், இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கிய இந்த மழையால், சில இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது..

திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டையில் பெய்த கனமழையால் திருத்தணி - சோளிங்கர் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் 10க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன.. இதனால் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்