"ஆமா பிரேக் எது..?" - அரசு பேருந்தை தானே ஓட்டிய பெண் MLA.. அலறிய பயணிகள்; மரண பீதியில் நிஜ ஓட்டுநர் - வெளியான பரபரப்பு வீடியோ
கர்நாடகாவில், பெண்கள் அரசு பேருந்தில் இலவசமாக பயணிக்கும் திட்டத்தை தொடங்கி வைத்த காங்கிரஸ் எம்எல்ஏ ரூபகலா சசிதர், தானே முன்வந்து பேருந்து இயக்கிய வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
பேருந்தில் கூட்டம் நிரம்பி வழிய, பெண் எம்எல்ஏ வாகனத்தை ஓட்டிய ஸ்டைல், பயணிகளை தூக்கி அள்ளியது.
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்ததைத் தொடர்ந்து, தேர்தல் அறிக்கையில் கூறியபடி, பெண்கள் அரசு பேருந்தில் இலவசமாக பயணிக்கும் சக்தி திட்டமானது செயல்பாட்டிற்கு வந்தது.
கோலார் தங்க வயல் நகரில், இந்த திட்டத்தை காங்கிரஸ் எம்எல்ஏ ரூபகலா சஷிதர் தொடங்கி வைத்தார். அப்போது, திட்டத்தை தொடங்கி வைக்கும் விதமாக, நானே பேருந்தை இயக்கி, தொடங்கி வைக்கிறேன் என விடாப்பிடியாக ஓட்டுநர் சீட்டில் அமர்ந்தபடி, பேருந்தை இயக்கியது, அங்கிருந்தவர்களின் கைத்தட்டல்களை அள்ளியது...
எம்எல்ஏ ரூபகலாவின் டிரைவில்கில் அசந்து போன பேருந்து ஓட்டுநர், தனக்கு தெரிந்த வித்தைகளை கற்றுத் தர, திருப்பு... திருப்புனு... ஸ்டேரிங்கை திருப்பியதும், இதுதான் கியரா? இது எங்க தள்ளுறது... ஓ இங்கதானா.... என எம்எல்ஏ ரூபகலாவின் டிரைவிங்கை கண்டு அங்கு வியந்தவர்கள் பலர்...
இதனிடையே, எம்எல்ஏ ரூபகலா சசிர், பேருந்தை தவறுதலாக ஓட்டி, அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மீது மோதியதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வரும் நிலையில், அது போன்ற எந்த ஒரு சம்பவமும் நடக்கவில்லை என கூறப்படுகிறது.