"இனி என்னை சந்திக்க வந்தால்..?" தொண்டர்களுக்கு அமைச்சர் உதயநிதி திடீர் வேண்டுகோள்...

Update: 2022-12-31 10:49 GMT

தன்னை சந்திக்க வரும் திமுகவினர், மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் அத்தியாவசியப் பொருட்களை பரிசாக வழங்கலாம் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தன்னை சந்திக்க வரும் கட்சியினர், இனி மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் அத்தியாவசியப் பொருட்களை அன்புப் பரிசாக வழங்கலாம் எனவும், அவற்றை ஆதரவற்ற குழந்தைகள், முதியோர் காப்பகங்களுக்கு வழங்க முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். பட்டு சால்வை, பூங்கொத்து போன்றவற்றை தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டுள்ள அவர், ஒருவருக்கொருவர் சால்வை அணிவிப்பதற்கான தேவைகளை நாம் எட்டிவிட்டதாக, தான் கருதுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்