மதுரை மற்றும் கோவை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான விரிவான திட்ட அறிக்கை, அடுத்த மாதம் அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என, சென்னை மெட்ரோ இரயில் நிறுவன அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மதுரையில் திருமங்கலம் முதல் ஒத்தக்கடை வரை மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. அதேபோல் கோவையில், அவிநாசி சாலையிலிருந்து கருமத்தம்பட்டி வரையிலும், உக்கடத்தில் இருந்து சத்தியமங்கலம் சாலையில் வலியம்பாளையம் பிரிவு வரையிலும், மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இந்தநிலையில் இந்த திட்டங்களுக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள், 90 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக சென்னை மெட்ரோ இரயில் நிறுவன அதிகாரிகள் கூறியுள்ளனர். அடுத்த மாதம் விரிவான திட்ட அறிக்கை தமிழ்நாடு அரசிடம் சமர்ப்பிக்கப்படும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.