அதிமுக ஆட்சி மீண்டும் அமையும்போது கும்மியாட்ட கலை நிகழ்ச்சி தமிழகம் முழுவதும் நடத்தப்படும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்துள்ளார். சேலம் மாவட்டம், சங்ககிரியில், கொங்கு பாரம்பரிய கலையை மீட்டெடுக்கும் திருவிழாவாக, மங்கைவள்ளி கும்மி குழுவின் 75வது பவளவிழா அரங்கேற்றம் நடைபெற்றது. விழாவை தொடங்கி வைத்து பேசிய எடப்பாடி பழனிசாமி, பாரம்பரியமான கும்மி கலை புத்துயிர் பெற்று வருவதை கண்டு மகிழ்ச்சி அடைவதாக கூறினார். இந்த கும்மியாட்ட கலை நிகழ்ச்சியில் சேலம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இருந்து ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட பெண்கள், சிறுமிகள் பங்கேற்று கும்மியாடி அசத்தினர்.