குடிமகனின் குமுறல்..``எல்லாம் என் நேரம்..இதல்லாம் கேக்கனும்னு''- டாஸ்மாக் ஊழியரின் குபீர் ரியாக்சன்
மதுரை மாவட்டம் சோழவந்தான் சுற்றுவட்டார பகுதிகளில் அரசு மற்றும் தனியார் மதுபான கடைகளில் மதுபான பற்றாக்குறையால் மதுப்பிரியர்களுக்கும், மதுபான விற்பனை பணியாளருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குறைந்த விலை மது பாட்டில் இல்லை என்றால் கடையை இழுத்து மூடுமாறு கூறி மது பிரியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் மது பாட்டில்களின் விலையை மீண்டும் மீண்டும் ஏற்றினால் தங்களைப் போன்று மதுக்கு அடிமையான கூலி வேலை செய்பவர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் தவிப்பதாக மது பிரியர்கள்வேதனை தெரிவித்துள்ளனர்.