'நோமோஃபோபியா' என்றால் என்ன?..70 வயதில் வரக்கூடிய நோய்கள் இளமையில்..அடிக்கடி செல்போன் அடிப்பது போல் மாயை
அதிக நேரம் செல்போன் பயன்படுத்துவது நோமோஃபோபியா என்னும் மனநோய்க்கு வழிவகுப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கை செய்கின்றனர் ... செல்போன் பிரியர்களுக்கான எச்சரிக்கையை விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு.....
செல்போன் என்பது தொடர்பு சாதனம் மட்டுமே என்ற காலம் போய், தற்போது வாழ்க்கையின் அங்கமாகவே மாறிவிட்டது. தற்போது இளைஞர்கள்தான் அதில் அதிக அளவு சிக்கித் தவிக்கின்றனர் .
காலையில் எழுந்து கழிவரை செல்வது முதல், குடும்பத்தினருக்கு நேரம் ஒதுக்குவது, நண்பர்களுடன் பேசி சிரிப்பது, விளையாட்டு என இளைஞர்களின் புற உலக வாழ்க்கையை செல்போன் ஆக்கிரமித்துவிட்டது...
மிதமிஞ்சிய செல்போன் பாயன்பாட்டில் ஏற்படும் பாதிப்பு குறித்து, பகீர் செய்திகள் வந்து போனாலும் நாம் அதை கண்டுகொள்வதில்லை. தற்போது "நோமோஃபோபியா" எனும் மனநோய்க்கு வழிவப்பதாகவும் மருத்துவர்கள் ஒரு புது குண்டை தூக்கிப்போட்டுள்ளனர்.
செல்போன் அழைப்பு வருவதற்கு முன்னரே செல்போனைப் பார்க்கும் பழக்கம், தொலைதூரத்தில் செல்போன் இருக்கும்போது செல்போன் அடிப்பதாக உணர்வது உட்பட பல அறிகுறிகளை முன்வைக்கின்றனர்.
தவிர, செல்போன் உபயோகிப்பதால் உடலின் பல பாகங்களில் வலி ஏற்படுவதாக தெரியவந்துள்ளது. கண்ணின் தசைகளில் வலி,கழுத்து வலி, முதுகு வலி, இடுப்பு வலி, தோள்பட்டை வலி என 70 வயதில் வரக்கூடிய அத்தனை வலிகளும் முன்கூட்டியே வருகின்றன.
இதில் இருந்து தீர்வு கிடைக்க twenty twenty formula - வை மருத்துவர்கள் பரிந்துரை செய்கின்றனர். அதாவது 20 நிமிடம் செல்போன் பார்த்தால் 20 அடி தொலைவில் உங்கள் பார்வையை குவிக்க வேண்டும்.
அடுத்ததாக 20 முறை உங்கள் கண்களை சிமிட்ட வேண்டும். இதன் மூலம் கண்களில் உள்ள வறட்சி குறையும். ஒவ்வொரு 20 நிமிடத்திற்கு ஒரு முறை 20 அடிக்கு நடக்க வேண்டும் என கூறியுள்ளனர். இதில் நல்ல முன்னேற்றம் இருப்பதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
அதிவேக உலகில் செல்போன் பயன்பாடு இன்றியமையாதது என்பதை யாராலும் மறுக்க முடியாது. ஆனாலும் நம் உடலுக்கு ஆபத்து என தெரிந்தால் அதில் இருந்து விலகி இருப்பதே நல்லது....