மதுபான கொள்கை முறைகேடு புகார் வழக்கில் கைது செய்யப்பட்ட டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவுக்கு மார்ச் 20 வரை நீதிமன்ற காவல் விதித்து டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மதுபான கொள்கை முறைகேடு புகார் வழக்கில் கைது செய்யப்பட்ட மணீஷ் சிசோடியாவை சிபிஐ கடந்த 27-ஆம் தேதி கைது செய்தது. 7 நாள் சிபிஐ காவல் நிறைவடைந்த நிலையில், சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம் கே நாத்பால் முன் சிசோடியாவை மீண்டும் ஆஜர்படுத்தியது. விசாரணையில், இந்த விவகாரத்தை அரசியல் ஆக்குவதாக சிபிஐ தரப்பில் வாதிட்டப்பட்டு, நீதிமன்ற காவலில் வைத்திருக்கவும் கோரப்பட்டது.இதற்கு சிசோடியாவின் சார்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. சிபிஐயின் கோரிக்கையை ஏற்ற டெல்லி சிபிஐ நீதிமன்றம், சிசோடியாவுக்கு மார்ச் 20 வரை நீதிமன்ற காவல் விதித்தது. திகார் சிறையில் நாட்குறிப்பு, பேனா, பகவத் கீதை, மூக்கு கண்ணாடி, மருந்து பொருட்கள் ஆகியவற்றை வழங்கவும் அனுமதியளித்தது. மணீஷ் சிசோடியாவை தியான சிறைக்கூடத்தில் வைத்திருக்கவும் சிறை கண்காணிப்பாளருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.