கொஞ்சி, கொஞ்சி குழந்தைகளுக்கு வரவேற்பு... இதயங்களை வென்ற அங்கன்வாடி ஊழியரின் அன்பு
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒரு அங்கன்வாடியில் ஊழியர் ஒருவர் மகிழ்ச்சியுடன் குழந்தைகளை வரவேற்கும் வீடியோ இணையத்தில் பலரது பாராட்டுகளைப் பெற்றுள்ளது... பொதுவாக பால்வாடி என்றழைக்கப்படும் இந்த அங்கன் வாடிக்கு வரும் பால் மணம் மாறா பச்சைக் குழந்தைகள் தாயைப் பிரிந்த சோகத்தில் அழுது கொண்டும், ஒரு வித பயத்துடனும் வருவர்... அவர்களின் அச்சத்தைப் போக்கும் விதமாக திருவள்ளூரில் உள்ள அங்கவாடி ஊழியர் ஒருவர், குழந்தைகள் விரும்பும் விதத்தில் அவர்களைக் கட்டியணைத்தும், விளையாண்டும் உற்சாகமாக வரவேற்கும் வீடியோ இணையத்தில் அதிகம் பேரால் பாராட்டப்பட்டு வருகின்றது...