நடிகர் விஜய் அரசியலில் நுழைய அடித்தளமிட்டுள்ளதாகவும், அவர் அரசியலுக்கு வர வேண்டுமென்றால் போராட்டக் குணம் தேவை என்றும், தயாரிப்பாளர் கே.ராஜன் தெரிவித்துள்ளார். சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்கும் முன்பு, செய்தியாளர்களை சந்தித்த தயாரிப்பாளர் கே.ராஜன், சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய் போட்டியிடுவார் எனக் கூறினார்.