புயல் வேகம் செல்லும் வந்தே பாரத்..அந்த Spot-ல மட்டும் ஆமையாயிடுச்சு..பலரின் உயிரை எடுத்த விபத்து
ஒடிசாவில் விபத்து ஏற்பட்டு சீரமைக்கப்பட்ட தண்டவாளப் பகுதியில் ஹவுரா-பூரி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு உள்ளது. இன்று காலை 9:30 மணியளவில் பஹானாகா பஜார் ரயில் நிலையத்தை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் கடந்தது. விபத்து நடந்த இடத்தில் இருந்த ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், வந்தே பாரத் ரயில் சென்றபோது ஓட்டுனர்களிடம் கை அசைத்ததாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.