பிரதமர் மோடியுடன் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சந்திப்பு - இளம் இந்தியர்களுக்கு விசா வழங்க பச்சைக்கொடி
மூவாயிரம் இளம் இந்தியர்கள் தங்கள் நாட்டில் தங்கி பணிபுரிய வாய்ப்பு வழங்கும் விதமாக புதிய விசா திட்டத்திற்கு இங்கிலாந்து அரசு பச்சை கொடி காட்டியுள்ளது. இந்தோனேஷியாவின் பாலி தீவில் வைத்து ஜி-20 உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. மாநாட்டின் முதல் நாளான நேற்று இங்கிலாந்து பிரதமரான ரிஷி சுனக்கை பிரதமர் மோடி சந்தித்தார். இந்த சந்திப்பு நடந்த சில மணி நேரத்திலேயே படித்த இளம் இந்தியர்களை ஊக்குவிக்கும் விதமாக மூவாயிரம் விசா வழங்க அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன் படி, இந்த விசாவின் மூலம் இனி 18 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்ட படித்த இளம் இந்தியர்கள் இரண்டு ஆண்டுகள் வரை இங்கிலாந்தில் தங்கி, அங்கேயே பணிபுரிய முடியும்.
இங்கிலாந்தில் இந்த விசா திட்டத்தின் கீழ் பயன்பெறவுள்ள முதல் நாடு இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது.