"கைப்பந்தை இந்திய அளவில் கொண்டு சேர்த்தவர் சிவந்தி ஆதித்தனார்" - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம்
தமிழகத்தில் இன்று கைப்பந்து போட்டி பலராலும் விளையாடப்படுகிறது என்றால், அதற்கு முக்கிய காரணம் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கிடையேயான, கைப்பந்து சாம்பியன் ஷிப் போட்டி நடைபெற்றது. இதனை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்போது மேடையில் பேசிய அவர், கைப்பந்து போட்டியை தமிழகம் மட்டுமில்லாமல் இந்திய அளவில் கொண்டு சேர்த்தவர் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் என கூறினார். ஒலிம்பிக் அசோசியேஷன் தலைவராக இருந்து நம்முடைய வீரர்களை வழி நடத்தியவர் என்று கூறிய அவர், தமிழகத்தில் பலராலும் இன்று கைப்பந்து விளையாடப்படுகிறது என்றால், அதற்கு முக்கிய காரணமாக இருந்தவர், பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் என்றும் புகழாரம் சூட்டினார்.