பொதுத்தேர்வு எழுதிய இரட்டையர்கள் - ஒரே மதிப்பெண் எடுத்த அதிசயம்!

Update: 2023-05-11 15:55 GMT

கோவை வடவள்ளி தொண்டாமுத்தூர் சாலையில் உள்ள வேம்பு அவென்யூவை சேர்ந்தவர் சுவாமிநாதன். இவரது மனைவி ஜெயசுதா. இவர்களுக்கு நிரஞ்சன், நிவேதா என இரட்டை குழந்தைகள் உள்ளனர். மேலும் இருவரும் வடவள்ளி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்தனர். இந்த நிலையில் அண்மையில் வெளியான 12 ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகளில் நிரஞ்சன் மற்றும் நிவேதா ஆகிய இரண்டு பேரும் 600 மதிப்பெண்ணுக்கு 530 மதிப்பெண்கள் என ஒரே மதிப்பெண் எடுத்து ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளனர். சிறுவயதிலிருந்தே பல விஷயங்களில் ஒற்றுமையாக இருந்தாலும், படிப்பு விஷயத்தில் போட்டி போட்டு படிக்கும் இருவருக்கும், 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண் எடுத்துள்ளனர்

Tags:    

மேலும் செய்திகள்