"டெல்லி புரிந்துகொள்ளும்" - பகீர் கிளப்பிய டிடிவி தினகரன் | T. T. V. Dhinakaran | EPS | OPS
- துரோகிகளைப் பற்றி டெல்லியில் இருப்பவர்கள் புரிந்து கொள்வார்கள் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
- சசிகலாவின் உறவினர் டாக்டர் சிவகுமார் இல்லத் திருமண விழா, திருவாரூரில் நடைபெற்றது.
- இதில், சசிகலா, டிடிவி.தினகரன், திவாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த டிடிவி தினகரன், சிலரின் பதவிச் சண்டைகளால் அதிமுக தொண்டர்கள் வருத்தத்தில் இருப்பததாகவும் அமமுகதான் உண்மையான இயக்கம் என்பதை விரைவில் உணருவார்கள் என்றும் கூறினார்.