ஒரே டிக்கெட்டில் பஸ், ரயில்களில் பயணிக்கலாம் - சென்னையில் வரப்போகும் அசத்தல் திட்டம்..! | TN GOVT
ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமத்தின் முதல் கூட்டம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடக்க உள்ளது.
சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் தலைவராக, முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர், இந்த குழுமத்தின் முதல் கூட்டம் நடக்கிறது. போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், சென்னைப் பெருநகருக்கான புதிய போக்குவரத்துத் திட்டத்தை செயல்படுத்தவும், சென்னையின் அடுத்த 30 ஆண்டு வளர்ச்சியை மையப்படுத்தி சாலைகள் அமைக்கவும், மழை வெள்ளம் காலங்களில் சிக்கலின்றி பயணம் செய்யவும், 5 ஆயிரத்து 904 கிலோமீட்டர் பரப்புக்கு தேவையான ஒருங்கிணைந்த போக்குவரத்து வசதியை ஏற்படுத்துவதற்காக ஆலோசனை நடத்தப்பட உள்ளது. பேருந்து, புறநகர் மின்சார ரயில், மெட்ரோ ரயில் என அனைத்து வசதிகளையும் ஒருங்கிணைத்து, ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையங்கள் அமைப்பது குறித்து விவாதிக்கப்பட உள்ளது. மேலும், அனைத்து பொது போக்குவரத்திற்கும் ஒரே டிக்கெட்டில் பயணம் செய்யும் வகையில் டிக்கெட் கட்டணத்தை நிர்ணயிப்பது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.