தமிழகத்தில், முதுமலை, ஆனைமலை, வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல்பூங்கா, திருச்சிராப்பள்ளி யானைகள் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையம் ஆகியவற்றில் யானைகள் முகாம்கள் செயல்படுகின்றன.
இவற்றில் 63 யானைகள் பாராமரிக்கப்படுகின்றன.
இங்கு 37 பாகன்கள், 28 உதவியாளர்கள் மற்றும் 56 பேர் ஒப்பந்த அடிப்படையிலான பணியாளர்கள் உள்ளனர்.
இந்நிலையில், இவர்களுக்கு தாய்லாந்தில் உள்ள தாய் யானைகள் பாதுகாப்பு மையத்தில், அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில், ஆனைமலை, முதுமலை புலிகள் காப்பகத்தைச் சேர்ந்த சேர்ந்த 13 பாகன்கள், உதவியாளர்கள் மற்றும் அதிகாரிகள் தலைமையில் விரைவில் தாய்லாந்து செல்ல உள்ளனர்.