கோடை சீசனை கரெக்டா பயன்படுத்தும் சுற்றுலாப் பயணிகள்.. குன்னூர் சிம்ஸ் பூங்காவில் அள்ளிய கூட்டம்
தொடர் விடுமுறை காரணமாக, நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் சுற்றுலாப் பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் தொடங்கியுள்ளது. தமிழகம் மற்றுமின்றி கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள், குன்னூர் சிம்ஸ் பூங்காவுக்கு வருகை தந்துள்ளனர். பூங்காவில் உள்ள நூற்றாண்டு பழமையான மரங்கள் மற்றும் தாவரங்களை கண்டுகளித்தனர். படகு சவாரி ரத்து செய்யப்பட்டதால் ஏமாற்றம் அடைந்தனர்.