டாப் 10 உலக பணக்காரர்கள் பட்டியலில் இருந்து பின்னுக்கு தள்ளப்பட்ட அதானி

Update: 2023-02-01 05:09 GMT

கெளதம் அதான ியின் சொத்து மதிப்பு நேற்று ஒரே நாளில் 821 கோடி டாலர் அளவுக்கு சரிந்துள்ளது.

அதானி குழுமத்தின் பங்கு விலைகள் முறைகேடுகள் பற்றிய ஹிண்டன்பர்க் அறிக்கையின் விளைவாக, அதானி நிறுவனங்களின் பங்கு விலைகள் தொடர்ந்து சரிந்து கெளதம் அதானியின் சொத்து மதிப்பும் வெகுவாக சரிந்து, உலக பணக்காரர்கள் வரிசையில் மூன்றாம் இடத்தில் இருந்து 11ஆம் இடத்திற்கு சரிந்தார்.

இந்த நிலையில், அதானி நிறுவனங்களின் பங்கு விலைகள் நேற்று மேலும் சரிந்ததால், அதானியின் சொத்து மதிப்பு 821 கோடி டாலர் அளவுக்கு குறைந்து, 8 ஆயிரத்து 440 கோடி டாலரானது.

இந்திய ரூபாயில் 67 ஆயிரத்து 272 கோடி ரூபாய் அளவுக்கு நேற்று ஒரே நாளில் குறைந்து, 6 புள்ளி 91 லட்சம் கோடி ரூபாயாக சரிந்தது.

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் அவரின் சொத்து மதிப்பு 2 புள்ளி 95 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு சரிந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்