மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (01.06.2023)

Update: 2023-06-01 07:56 GMT
  • சிங்கப்பூர், ஜப்பானில் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கண்டிப்பாக செயல்பாட்டிற்கு வரும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.... சுற்றுப்பயணம் முடிந்து சென்னை திரும்பிய நிலையில், அதிகாரிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தல்.....
  • மேகதாது விவகாரத்தில், தமிழக அரசு வேடிக்கை பார்ப்பதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு..... தமிழகத்தின் உரிமையை அரசு நிலைநாட்ட வேண்டும் என முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ் வலியுறுத்தல்...
  • சீமானின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டது தொடர்பாக சென்னை பெருநகர காவல்துறை விளக்கம்.... இதுதொடர்பாக எவ்வித கோரிக்கையும் விடுக்கப்படவில்லை எனவும் அறிக்கை....
Tags:    

மேலும் செய்திகள்