நெல்லைக்கு அமைச்சர் வருகை.. முன்னெச்சரிக்கையாக பாஜக மாவட்ட செயலாளர் உட்பட 3 பேர் கைது

Update: 2022-12-26 05:34 GMT

நெல்லை மாவட்டத்தில் நடைபெறும் சமூக நலத்துறை விழாவில் கலந்து கொள்வதற்காக அமைச்சர் கீதா ஜீவன் வருவதை ஒட்டி பாஜக மாவட்ட செயலாளர் உட்பட மூன்று பேரை போலீசார் முன்னெச்சரிக்கை கைது செய்ததை ஒட்டி மானூர் காவல் நிலையம் முன்பு பாஜகவினர் குவிந்து வருகின்றனர்.

அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெறும் மானூர் ஊராட்சி அலுவலகம் முன்பும் போலீஸ் குவிப்பு

சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெறும் மானூர் ஊராட்சி அலுவலகம் முன் போலீஸ் குவிப்பு

முன்னெச்சரிக்கையாக கைது செய்யப்பட்ட 3 பேர் திருமண மண்டபத்தில் அடைப்பு.

கைது செய்யப்பட்ட நபர்களை விடுவிக்காவிட்டால் தாங்களும் செல்ல மாட்டோம் என பாஜக மாவட்ட தலைவர் தலைமையில் வந்த 40-க்கும் மேற்பட்டோர் மண்டபத்தில் உள்ளிருப்பு போராட்டம்

Tags:    

மேலும் செய்திகள்