"திருச்செந்தூர் கோயிலில் ரூ.300 கோடியில் மாஸ்டர் பிளான் திட்டம்"-உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
திருச்செந்தூர் முருகன் கோயிலில், 300 கோடி ரூபாய் மதிப்பில் மாஸ்டர் பிளான் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில், தமிழக அரசு தெரிவித்துள்ளது. கோயிலின் பிரகாரத்தில், கந்த சஷ்டி விரதம் இருப்பவர்களுக்கு இடம் ஒதுக்க உத்தரவிடக்கோரி, தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சித்ரங்கநாதன் என்வர் பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்யநாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, திருச்செந்தூர் முருகன் கோயிலில், 300 கோடி மதிப்பில் மாஸ்டர் பிளாண்ட் திட்டம் தொடர்பான பணிகள் நடந்து வருவதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் நம்பிக்கை அளிப்பதாக இருப்பதாகவும்,எனவே இந்த தொகையை நியாயமாக பயன்படுத்தி பணிகளை விரைவாக முடித்து, பக்தர்கள் பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.