தங்கவேலால் சூரனை வதம் செய்த முருகன் - அரோகரா...அரோகரா என கோஷமிட்ட பக்தர்கள்
தங்கவேலால் சூரனை வதம் செய்த முருகன் - அரோகரா...அரோகரா என கோஷமிட்ட பக்தர்கள்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், கந்த சஷ்டி திருவிழா கடந்த 25ஆம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. ஜெயந்திநாதர் வள்ளி தெய்வானைக்கு தினமும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில், விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடைபெற்றது. முதலாவதாக யானை முகம் கொண்ட தாரகாசுரனை, சுவாமி ஜெயந்திநாதர் வதம் செய்தார். இரண்டாவதாக சிங்க முகம் கொண்ட சிங்கமுகாசுரனை வதம் கொண்ட ஜெயந்திநாதர், தன்முகத்தோடு வந்த சூரபத்மனை வதம் செய்தார். பின்னர், மாமரமாகவும், சேவலாகவும் மாறிய சூரபத்மனை வதம் செய்த, சுவாமி ஜெயந்திநாதர், சேவற்கொடியாகவும், மயிலாகவும் ஆட்கொண்டார். 2 ஆண்டுகளுக்கு பிறகு வெகு விமரிசையாக நடைபெற்ற இந்நிகழ்வில், லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.