"அமெரிக்கா, தென் கொரியாவுக்கு நேரம் சரியில்லை, தயாராக இருங்கள்" - கிம்மின் சகோதரி பகிரங்க எச்சரிக்கை
தென்கொரியாவுடன் அமெரிக்கா மேற்கொண்டுள்ள அணு ஆயுத ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் தீவிர ஆபத்தை ஏற்படுத்தும் என வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் தங்கையான கிம் யோ ஜாங் எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்த 26ம் தேதி அமெரிக்காவின் அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பலை தனது நாட்டின் கடற்பகுதியில் நிறுத்த தென்கொரியா ஒப்புக் கொண்டது. ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், கிம் யோ ஜாங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.