துப்பாக்கி முனையில் கொலை மிரட்டல்..துரத்தி பணம் திருடும் கொள்ளையர்கள் -காதல் ஜோடிக்கு செய்த ஒரு உதவி
டெல்லியில், சாலையில் சென்ற தம்பதியிடம் துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்க முயன்ற 2 கொள்ளையர்கள், அவர்களிடம் பணம் இல்லாததால் பணம் கொடுத்துவிட்டுச் சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.
டெல்லி ஃபார்ஷ் பஜார் பகுதியான ஷாதாராவில், மதுபோதையில் கொள்ளையர்கள் இருவர் பைக்கில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, சாலையில் நடந்து சென்ற தம்பதியரிடம், துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்க முயன்றனர். எனினும், அவர்களிடம் 20 ரூபாய் மட்டுமே இருந்ததால், அவர்களிடம் 100 ரூபாயை கொள்ளையர்கள் கொடுத்துவிட்டுச் சென்றனர். இதன்பின்னர் கொள்ளையர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்ததில், கொள்ளையர்கள் இருவரும் பல பகுதிகளில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து கைத்துப்பாக்கி, ஸ்கூட்டர் மற்றும் 30 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். 4 வழக்குகளை பதிவு செய்து கொள்ளையர்கள் இருவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.