"தீர்ப்பை எதிர் பார்த்து செத்தவர்கள் மறுஜென்மத்தில் நாயாக வந்திருக்கலாம்" நீதிபதி பரபரப்பு பேச்சு

Update: 2023-07-16 02:36 GMT

நீதிமன்றத்தில் தீர்ப்பை எதிர்பார்த்து மரணித்தவர்கள், மறுஜென்மத்தில் நாயாக வந்து நீதிமன்றத்தில் உலா வரக்கூடும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நீதிபதிகள் ஓய்வெடுப்பதற்காக புனரமைக்கப்பட்ட ஓய்வு விடுதியினை, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ் மற்றும் என். ஆனந்த வெங்கடேஷ் ஆகியோர் திறந்து வைத்தனர். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில், நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் பேசுகையில், வசதியானவர்கள், அதிகார பலம் படைத்தவர்கள் ஆகியோருக்காக தான் பெரும்பாலும் நீதிமன்றங்கள் செயலாற்றிக் கொண்டிருப்பதாக அவர் கூறினார். மேலும், பாமர மக்களின் வழக்குகளை விரைந்து முடிக்கவே இந்த சமரச தீர்வு மையம் தேவைப்படுகிறது எனவும் அவர் தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்