நேற்று சின்ன வெங்காயம் 200 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று 20 ரூபாய் குறைந்து 180 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
நேற்று 1 கிலோ பீன்ஸ் 110 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று 90 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
பூண்டு நேற்று 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று 10 ரூபாய் உயர்ந்து 210 ரூபாய்க்கும்,
தக்காளி 110 ரூபாய்க்கும், இஞ்சி 230 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
உருளை, எலுமிச்சை 30 ரூபாய்க்கும், ஊட்டி கேரட், பச்சை மிளகாய் 65 ரூபாய்க்கும், பெங்களூர் கேரட் 40 ரூபாய்க்கும், ஊட்டி பீட்ரூட் 38 ரூபாய்க்கும், கர்நாடக பீட்ரூட், வரி கத்திரி, மாங்காய் 25 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
வெண்டை, உஜாலா கத்திரி 35 ரூபாய்க்கும், பாகற்காய், அவரை 60 ரூபாய்க்கும், முருங்கை 50 ரூபாய்க்கும், பட்டாணி 190 ரூபாய்க்கும், தேங்காய் 27 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.