"இதுக்கா இவ்வளவு 'Crying" - கண்ணீர் விட்டு அழுத அதிபர்... - காரணம் இதுதான்?

Update: 2023-01-02 13:48 GMT

4வது மிகப்பெரிய ஜனநாயக நாடான பிரேசிலில் கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற தேர்தலில் பொல்சனாரோவை வீழ்த்தி வெற்றி பெற்ற நிலையில், ஊழல் வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்த இடதுசாரி தலைவர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா பிரேசிலின் அதிபராக பதவியேற்றார்.

முன்னாள் அதிபரும் தீவிர வலதுசாரி தலைவருமான ஜெய்ர் பொல்சனாரோவின் ஆதரவாளர்களின் வன்முறை அச்சுறுத்தல்களைத் தொடர்ந்து தலைநகர் பிரேசிலியாவில் பலத்த பாதுகாப்பின் கீழ் லுலா பதவியேற்றுக் கொண்டார்.

லுலா அதிபராகத் தேர்ந்தெடுக்கப் பட்டதற்கு பொல்சனாரோ ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தி வந்த நிலையில், பரபரப்பிற்கு மத்தியில் லுலாவின் பதவியேற்பு விழா நடைபெற்றது.

பல்லாயிரக்கணக்கான லுலா ஆதரவாளர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்